Sunday, June 28, 2009

இந்தியாவும், இலங்கையும்


இந்தியாவும், இலங்கையும்

ஓர் எழுத்து இதில் அகதியாய்

வந்தது தான் எங்கள் தலை எழுத்து

தமிழ்க் கொண்டு என்னை வளர்த்த தாயகமே

எங்கள் உயிர்க்காத்த உனக்கு

ஒரு வந்தனமே....

பச்சைக்கிளி கூட்டம் போல

வாழ்ந்து வந்தோம்

இன்று பிச்சை எடுக்கும் கூட்டம் போல

சிதைந்து விட்டோம்

சொத்து சுகம் எல்லாம்

பறி கொடுத்து இன்று

சோத்துக்காக நின்றோம் கைகட்டி

பத்து வருடம் ரத்தம் சிந்தி

சோர்த்தது எல்லாம் பத்து நிமிட

வாழ்க்கை போல கரிச்சாம்பலானது

பித்துபிடித்த தீ பற்றி எல்லாம்

எரிந்து போனதால் கச்சை கூட

இல்லாமல் கை ஏந்தி நின்றோம்.

அகதியை ஓடி வந்தோம்

நாங்கள் வாடிக்கையா

அகதிக்குள்ளே அகதியாக வாழ்ந்து

இன்று வேடிக்கையான

எங்கள் நிலை,

இதற்கு காலம் தன்

பதில் சொல்ல வேண்டும் ...

1 comment:

  1. "பத்து வருடம் ரத்தம் சிந்தி
    சோர்த்தது எல்லாம் பத்து நிமிட
    வாழ்க்கை போல கரிச்சாம்பலானது"

    இந்த வரியை என்னால் ஏறுக்கொள்ள முடியவில்லை
    அழகான கவிதை

    ReplyDelete